48 மணிநேரத்தில் சரிந்த அமெரிக்க வங்கி: நம்பிக்கை இழந்த வாடிக்கையாளர்கள்!
அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது பாரிய வங்கி தோல்வியாக கருதப்படும் சிலிக்கான் வேலி வங்கியின் சரிவு கடந்த 48 மணி நேரத்திற்குள் நடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோசமான நிதிநிலை
அமெரிக்காவின் சிலிக்கான் வேலி எனும் வங்கி கடந்த வாரத்தில் மோசமான நிதிநிலை அறிக்கையைப் பற்றி வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து, அவ்வங்கியில் பணம் சேமித்து வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வங்கியின் மீதான தங்களது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.
@gettyimages
கடந்த வியாழன் அன்று சிலிக்கான் வேலி வங்கியின் பங்குகள் 60% சரிவுகளைச் சந்தித்துள்ளன.
இதற்கிடையில், பல முக்கிய துணிகர முதலீட்டாளர்கள் மற்றும் பிற முக்கிய முதலீட்டாளர்கள் ட்விட்டரில் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளது, இது சரிவு பற்றிய அச்சத்தை அவ்வங்கியின் வாடிக்கையாளர்களிடையே அதிகப்படுத்தியுள்ளது.
48 மணி நேரத்தில் சரிந்த வங்கி
வங்கியின் பங்கு சரிந்த கடந்த ஒரு வாரத்திற்குள் அதன் வாடிக்கையாளர்கள் சுமார் 42 பில்லியன் டொலர் பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். இது வங்கி இருப்புத் தொகையில் கிட்டதட்ட கால் பகுதி ஆகும்.
@Jeff Chiu/Associated Press
அதுவும் கடந்த வாரத்தில் ஒரே நாளில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு செய்தி காட்டு தீ போலப் பரவக்கூடிய இந்த டிஜிட்டல் சூழலில் சிலிக்கான் வேலி போன்ற நிதி நிறுவனங்களின் பலவீனம் குறித்து கேள்விகளைப் பலருக்கும் எழுப்பியுள்ளது.
மேலும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற இடங்கள் இணையத்தில் பரவுவது போன்ற தகவல்கள், ஒரு சிலரிடையே பீதி கிளப்பும் காரணமாக மாறியிருப்பதால் சிலிக்கான் வங்கி மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது.
@twitter
தொழில்முனைவோர் அலெக்சாண்டர் டோரெனெக்ராவின் கூற்றுப்படி, வங்கியின் திடீர் சரிவு தொடக்க நிறுவனர்களிடையே சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
"அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனர்களுடன் சமூக வலைத்தளத்தில் நான் பேசிய உரையாடல்கள் அனைத்தும் என்ன நடக்கிறது என்பதை விளக்குகின்றன," எனக் கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.