இந்திய விவசாயிகளுக்காக 40 கோடி ரூபாய் செல்வழித்த அமெரிக்க வாழ் சீக்கிய சமுகத்தினர்! வெளியான முழு விபரம்
விவசாயிகளின் போராட்டத்தை விளம்பரப்படுத்த, அமெரிக்கவாழ் சீக்கிய சமூகத்தினர், 40 கோடி ரூபாய் செலவழித்துள்ளது, சர்ச்சையாகி உள்ளது.
இந்தியாவில், மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லைப் பகுதியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, அமெரிக்க பாப் பாடகி ரெஹானா உள்ளிட்ட பலரும், சமூக வலைதளமான, 'டுவிட்டர்' வாயிலாக, அறிக்கை வெளியிட்டனர்.
நம் நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடும் வகையில், அவர்கள் அறிக்கை வெளியிட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை விளம்பரப்படுத்த, அமெரிக்க வாழ் சீக்கிய சமூகத்தினர், 40 கோடி ரூபாய் செலவழித்துள்ளது, தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில், 'சூப்பர் பவுல்' எனப்படும், சாம்பியன்ஷிப் கால்பந்து விளையாட்டுப் போட்டி, மிகவும் பிரபலம். இந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கு இடையே, 30 நொடிகள் ஒளிபரப்பப்படும் விளம்பரத்திற்கு, 40 கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதன் வாயிலாக, கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த சீக்கிய சமூகத்தினர், வெளியிட்ட விளம்பரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சைவேளாண் சட்டங்களுக்கு எதிராக, நம் நாட்டில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை வெளிச்சப்படுத்தும் வகையில், அந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரெஹானா பதிவிட்ட, 'டுவீட்' குறித்தும், அதனால், இந்தியாவில் கிளம்பிய எதிர்ப்புகள் குறித்தும், அதில் காட்சிப் படுத்தப்பட்டது.இந்தியாவில், விவசாயிகளுக்கு எதிராக, அரசு ஒடுக்குமுறைகளை கையாளுவதாகக் கூறி, அமெரிக்க மக்களின் ஆதரவை கோரும் வகை யில், அந்த விளம்பரம் உள்ளது.
கனடா மற்றும் அமெரிக்காவில், காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை பெரிதாக்க, விளம்பரம் செய்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.