லொட்டரியில் விழுந்த 426 மில்லியன் டொலர் பரிசு.. ஒரே இரவில் மில்லியினர் ஆன அமெரிக்கர்!
அமெரிக்காவில் ஒருவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 426 மில்லியன் டொலர் பரிசு தொகை விழுந்துள்ளது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் los Angels நகரை சேர்ந்த நபர் ஒருவர் Woodland Hills பிரிவில் இருக்கும் கேஸ் நிலையம் ஒன்றில் லொட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இதில் அந்த நபருக்கு 426 மில்லியன் டொலர் பரிசு தொகை விழுந்துள்ளது.
இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த லொட்டரி வாங்கிய நபர் யார் என்பது பற்றிய விவரம் சரி வர தெரியவில்லை. லொட்டரியில் பல மில்லியன் வென்ற நபரை நிறுவனம் தற்போது வலைவீசி தேடிகொண்டிருக்கிறது.
லொட்டரி பரிசு அடித்த அந்த நபர் தனக்கு விழுந்த தொகையை ஒரே தவணையாகவும் வாங்கிக் கொள்ளலாம். அல்லது 29 ஆண்டுகள் தவணை முறையிலும் பெற்றுக் கொள்ளலாம் என California லொட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து California லொட்டரி இயக்குனர் ஜான்சன் கூறியதாவது, இப்படி ஒரு அதிர்ஷ்டம் யாருக்காவது தான் கிடைக்கும். ஆனால் இப்போது அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரியவில்லை.
அவர் விருப்பப்படி தனக்கு கிடைத்த பரிசு தொகையை ஒரே தவணையிலோ அல்லது தவணை முறையிலும் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.