காதலால் பாகிஸ்தானில் சிக்கிய அமெரிக்கப் பெண்! $100,000 பணம் கேட்டு அரசிடம் கோரிக்கை
அமெரிக்க பெண் ஒருவரின் பாகிஸ்தான் பயணம் எதிர்பாராத திருப்பத்தை சந்தித்துள்ளது.
காதலனை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த அமெரிக்க பெண்
இரண்டு குழந்தைகளுக்கு தாயான 33 வயதான ஒனிஜா ஆண்ட்ரூ ராபின்சன், நியூயார்க்கில் இருந்து கராச்சிக்கு 19 வயதான நிடால் அகமது மெமோனை திருமணம் செய்து கொள்ள சென்றுள்ளார்.
ஆனால், மணமகனின் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ராபின்சன் பாகிஸ்தானில் காலாவதியான விசாவுடன் சிக்கி தவித்து வந்துள்ளார்.
இதையடுத்து பாகிஸ்தான் ஆர்வலர் மற்றும் யூடியூபரான ஜாபர் அப்பாஸ் அவரது கதையை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை அடுத்து, சிந்து மாகாண ஆளுநர் கம்ரான் கான் டெஸ்ஸோரி தலையிட்டு, அவரது விசா பிரச்சினைகளுக்கு உதவியதோடு. அமெரிக்காவுக்கான விமான டிக்கெட்டும் ஏற்பாடு செய்துள்ளார்.
இருப்பினும், ராபின்சன் பாகிஸ்தானிலேயே தங்கி, தொடர்ந்து விசித்திரமான கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்.
அமெரிக்க பெண்ணின் கோரிக்கைகள்
டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, அவர் மெமோனிடமிருந்து வாரத்திற்கு $3,000 மற்றும் பாகிஸ்தான் குடியுரிமை கோரியதாகவும் கூறப்படுகிறது.
நேர்காணல் ஒன்றில் தான் மெமோனை திருமணம் செய்து கொண்டதாகவும், விரைவில் துபாய் சென்று குடும்பம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் அரசாங்கத்திடம் $100,000, அதில் $20,000 ரொக்கமாகவும் வழங்க கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மனநல பரிசோதனை
இந்நிலையில் ராபின்சனின் மகன்கள் தனது தாய்க்கு இருதுருவக் கோளாறு மற்றும் மனநலப் பிரச்சினைகள் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளனர்.
அவரும் அவரது சகோதரரும் அமெரிக்காவுக்குத் திரும்பும்படி அவளை சமாதானப்படுத்த முயன்றதாகவும், ஆனால் அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ராபின்சன் கராச்சியின் ஜின்னா போஸ்ட் கிராஜுவேட் மருத்துவமனையின் மனநலப் பிரிவில் மனநல மதிப்பீட்டிற்காக அனுமதிக்கப்பட்டார்.
நீண்ட காலம் பாகிஸ்தானில் தங்கியிருந்த பிறகு, அவர் இப்போது இறுதியாக அமெரிக்காவுக்கு திரும்ப இருப்பதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |