வெளிநாட்டு பெண்ணுடன் காதல்! பட்டு சேலை அணிந்து பாரம்பரிய முறை திருமணம்... புகைப்படங்கள்
இந்திய இளைஞருக்கும், அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்துள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர் கந்துலா கிரண். இவர் அமெரிக்காவில் படித்து பணிபுரியும் நிலையில் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். படிக்கும் போது அந்நாட்டை சேர்ந்த மஹினி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது.
இருவரின் காதலுக்கும் அவர்களின் குடும்பத்தாரிடம் இருந்து சம்மதம் கிடைத்தது. இதையடுத்து இருவருக்கும் கிறிஸ்துவ முறைப்படி அமெரிக்காவில் திருமணம் நடந்தது.
பின்னர் மீண்டும் பாரம்பரிய இந்து முறைப்படி சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் மணமகனும், மணப்பெண்ணும் பட்டுவேட்டி, பட்டுசேலை அணிந்திருந்தனர்.
மணப்பெண்ணுக்கு இந்திய பாரம்பரிய முறை மிகவும் பிடித்திருந்ததால் அந்த கலாச்சாரத்தின்படி கிரணை மீண்டும் மணந்தார்.
கிரண் - மஹினி திருமணத்தில் இரண்டு குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.