இன்ஸ்டாகிராமில் பழகிய 12 வயது சிறுமிகளை துஷ்பிரோயகம் செய்த இளைஞர் கைது
இன்ஸ்டாகிராமில் பழகிய இரண்டு 12 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் நபர், கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் பழக்கம்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தை சேர்ந்த லூயுஸ் கியூவேடோ(Luis Quevedo) என்ற 19 வயது நபர் தொடர்ந்து இரண்டு மாத இடைவெளியில் சிறுமிகளை துஷ்பிரோயகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லூயுஸ் கியூவேடோ என்ற இளைஞர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இன்ஸ்டாகிராமில் பழகிய 12 வயது சிறுமியை மேரிலாந்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததின் பேரில் காவல் துறை அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
துஷ்பிரோயக வழக்கு
லூயுஸ் கியூவேடோ இன்ஸ்டாகிராமில் டிசம்பர் மற்றும் ஜனவரி இடையே பேசி பழகிய மற்றொரு 12 வயது சிறுமியை கற்பழித்ததாக காவல்துறை குற்றம் சாட்டுகிறது.
தொடர்ந்து இவர் பல சிறுமிகளோடு இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகுவது போல் பேசி துஷ்பிரோயகம் செய்ய முயன்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து கியூவேடோ கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவின் பெருநகர காவல் துறையின் இளைஞர் மற்றும் குடும்ப சேவைகள் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குற்றவாளி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு பின்னர் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.