பிரான்சுக்கு சுற்றுலா சென்ற அமெரிக்கர்கள் மீது தாக்குதல்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
சுற்றுலா சென்ற அமெரிக்கர்கள் மீது தாக்குதல்
பிரான்சுக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் இருவர், ஈபிள் கோபுரத்தின் அருகே வியாபாரம் செய்துகொண்டிருந்த வியாபாரிகளை படம் பிடித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகியுள்ளது.
அப்போது அந்த வியாபாரிகள் தங்களைத் தாக்கியதாக அந்த சுற்றுலாப்பயணிகள் பொலிசில் புகாரளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து ஒரு வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் கட்ட விசாரணை துவங்கியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
என்ன பிரச்சினை?
பிரச்சினைக்குக் காரணம் என்னவென்றால், கடந்த கோடையில் இதே போல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈபிள் கோபுரத்தின் அருகே, விளையாட்டு ஒன்றின் மூலம் மோசடியில் ஈடுபடும் சிலரை கடந்த ஆண்டு சுற்றுலாப்பயணி ஒருவர் வீடியோ எடுக்க முயல, அவருடன் அந்த மோசடியாளர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அதே சம்பவம் தொடர்பில், அதேபோன்றதொரு கூட்டத்தைக் குறிவைத்து இந்த சுற்றுலாப்பயணிகள் வீடியோ எடுத்ததாகவும், அதுவே சண்டைக்குக் காரணம் என்றும் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |