'இலங்கைக்கு செல்வதை தவிருங்கள்' அமெரிக்கா எச்சரிக்கை!
அதிக அளவிலான கொரோனா தொற்று காரணமாக இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள் என அமெரிக்கா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பயங்கரவாதத்தின் காரணமாகவும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில், "நீங்கள் FDA அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டால், கோவிட் -19 நோயால் பாதிக்கப்படுவதற்கும், கடுமையான அறிகுறிகளை உருவாக்குவதற்கும் உங்களுக்கு ஆபத்து குறைவாக இருக்கலாம்.
இருப்பினும், எந்தவொரு சர்வதேச பயணத்தையும் திட்டமிடுவதற்கு முன்பு, பயணிகளுக்கான CDC-யின் குறிப்பிட்ட பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்யுங்கள்" என்று கூறியுள்ளது.
வெளியுறவுத்துறை, அமெரிக்கர்களை "கோவிட் -19 காரணத்திற்காக மட்டுமின்றி, இலங்கையில் பயங்கரவாதத்தின் காரணமாக இராணுவபயிற்சி அதிகரித்த எச்சரிக்கையுடன் இருப்பதாலும்" இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.