நேட்டோ பயிற்சியின் போது மாயமான அமெரிக்க ஹெலிகாப்டர் குறித்து வெளியான முக்கிய தகவல்
ஐரோப்பிய நாடான நார்வேவில் இடம்பெற்று வரும் நேட்டோ ராணுவ பயிற்சியின் போது மாயமான அமெரிக்க ஹெலிகாப்டரின் நிலை குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடான நார்வேவில், நேட்டோ நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்று வருகிறது.
இந்த ராணுவ கூட்டு பயிற்சியில் 27 நாடுகளைச் சேர்ந்த 30,000 துருப்புகள் பங்கேற்றுள்ளன.
இதனிடையே, இந்த ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்காவுக்கு சொந்தமான MV-22B ஹெலிகாப்டர் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில். குறித்த ஹெலிகாப்டர் நார்வேவின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதாகவும், அதில பயணித்த நான்கு அமெரிக்க வீரர்களும் பலியானதாக உள்ளூர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிங்க முடியாமல் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
எனினும், விபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தற்போது வானிலை மோசமாக உள்ளதால் விசாரணையை தொடருவதில் தாமதம் ஏற்படுள்ளது.
வானிலை சீரடைந்தவுடன் விசாரணை பணிகள் மீண்டும் தொடங்கும் என உள்ளூர் பொலிசார் தெரிிவத்துள்ளனர்.