அமெரிக்காவுக்கு எங்களைக் குறித்து கவலையே இல்லை: பிரான்சில் வாழும் அமெரிக்கர்கள் கோபம்
அமெரிக்காவுக்கு எங்களைக் குறித்து கவலையே இல்லை என்று கூறி பிரான்சில் வாழும் அமெரிக்கர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.
காரணம் என்ன?
ட்ரம்ப் நிர்வாகம், பிரான்சிலுள்ள Rennes, Lyon, Strasbourg மற்றும் Bordeaux ஆகிய நகரங்களில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகங்களை மூட திட்டமிட்டுவருகிறது.
அப்படி இந்த தூதரகங்கள் மூடப்படும் பட்சத்தில், பாரீஸ் தவிர்த்து, Marseilleயில் மட்டுமே அமெரிக்க தூதரகம் செயல்படும். ட்ரம்பின் இந்த முடிவு, பிரான்சில் வாழும் அமெரிக்கர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Strasbourgஇல் வாழும் அமெரிக்கர் ஒருவர், வெளிநாடுகளில் வாழும் அமெரிக்கர்கள் குறித்தோ, அவர்களுடைய தேவைகள் குறித்தோ அமெரிக்காவுக்கு எந்த கவலையும் இல்லை போலிருக்கிறது என்று கூறியுள்ளார்.
தூதரகங்களை மூடும் ட்ரம்பின் திட்டத்தை எதிர்த்து, Strasbourgஇலுள்ள அமெரிக்க தூதரகம் முன் கூடிய அமெரிக்கர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |