பிரித்தானியாவில் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் திணறும் அமெரிக்கர்கள்
பிரித்தானியாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் கடும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் திணறுவதாக கூறுகின்றனர்.
ஹொட்டல் அறைகளுக்கு தஞ்சம்
அமெரிக்காவில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை சமாளித்து பழகிய அமெரிக்கர்கள், பிரித்தானியாவில் நிலவும் வெப்ப அலையால் திணறுகிறார்கள்.

கடலுக்கு அப்பால் வசிக்கும் அல்லது அங்கு வருகை தரும் அமெரிக்கர்கள் சில கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதாவது, புழுக்கமான குடியிருப்புகளை விட்டு வெளியேறி, ஹொட்டல் அறைகளுக்கு தஞ்சம் புகுகின்றனர். சிலர் பனிக்கட்டி பைகளை வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
அவர்கள் தங்கள் முகங்களை பனிக்கட்டியில் புதைப்பதற்காக அருகில் உள்ள கடைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
AC கூட இல்லை
ஃபுளோரிடாவைச் சேர்ந்த நபர் ஒருவர் குறைந்தபட்சம் AC கூட இல்லை என்று புலம்புகிறார். இன்னும் சிலர் பிரித்தானியாவை சஹாரா பாலைவனத்துடன் ஒப்பிடுகிறார்கள்.
இதற்கிடையில், பிரித்தானியாவைச் சேர்ந்த சமூக ஊடகப் படைப்பாளியான ஸ்டேசி, அதிகமான பிரித்தானியர்கள் AC-களில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
அவர், "எனக்கு மிகவும் சூடாக இருக்கிறது. காற்றோட்டமே இல்லை..நான் அவதிப்படுகிறேன். மின்விசிறிகள் போதுமானதாக இல்லை" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |