ஆவின் நெய்யை தான் அமெரிக்கர்கள் விரும்புகிறார்கள்: தமிழக அமைச்சர் பெருமிதம்
சட்டமன்றத்தில் நடைபெற்ற கேள்வி பதில் விவாதத்தின் போது, ஆவின் நெய்யை தான் அமெரிக்கர்கள் விரும்புகிறார்கள் என்று தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.
அமைச்சர் பேசியது
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற விவாதத்தில் எம்எல்ஏக்களின் கேள்விக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள்.
அந்தவகையில், அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் எழுப்பிய கேள்வியில், "கன்னியாகுமரியில் 56 சொசைட்டிகளில் ஆவின் பொருட்களை நீங்கள் வாங்க சொல்கிறீர்கள்.
சின்ன கிராமத்தில் இருக்கும் சொசைட்டிகளில் பொருட்கள் விற்பனையாவது இல்லை. மேலும், நீங்கள் சொசைட்டிக்கு வரக்கூடிய ஊக்கத்தொகையை ஆவின் மூலமாக வாங்க வேண்டும் என்கிறீர்கள்.
56 சொசைட்டிகளிலும் இந்த பிரச்னை தான் உள்ளது. சிறிய கிராமத்தில் வெண்ணெய், நெய் விற்க முடியாத சூழ்நிலையால் கொசைட்டிகள் நலிவடைந்து உள்ளன" என்று குறிப்பிட்டார்.
இவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், "தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு நிலையம் உள்ளது. இந்த ஆண்டில் இன்னும் அதிகமாக கொண்டு வரப்படவுள்ளது.
ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது என்பதால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும் அமெரிக்கர்கள் ஆவின் நெய் தான் விரும்புகிறார்கள். கிராம புறங்களில் ஆவின் நெய் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |