தேர்தல் முடிவை மாற்றியமைக்கும் கருக்கலைப்பு ஆதரவு: அமெரிக்க உச்சநீதிமன்ற முன்வரைவு சட்டத்தால் பரபரப்பு!
அமெரிக்காவில் நவம்பர் 8ம் திகதி நடக்கவிருக்கும் தேர்தலில் பெரும்பான்மையான மூன்றில் இரண்டு பங்கு மக்களின் ஆதரவு கருக்கலைப்பு சட்டத்திற்கு ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கே என கருத்துகணிப்பு முடிவுகள் தகவல் தெரிவித்துள்ளன.
கடந்த 1973ம் ஆண்டு Roe v. Wade வழக்கில் பெண்களின் கருக்கலைப்பு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பான சட்டத்தை திருத்துவது தொடர்பாக அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முன் வரைவு சமர்ப்பிக்கபட்டு அதற்கான ஒப்புதல் சமிக்கைகளை நீதிபதிகள் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை தொடர்ந்து, ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் அகியவை இணைந்து கடந்த செய்வாய்கிழமை 998 வாக்காளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பில், 41 சதவிகித மக்கள், பெண்களின் கருக்கலைப்பு சுதந்திரதிற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கபட்ட வரைவு, அமெரிக்காவை வாழ்வதற்கு மிகவும் மோசமான பகுதியாக மாற்றிவிடும் என தெரிவித்துள்ளனர்.
reuters
மேலும் 78% ஜனநாயகக் கட்சியினர் மற்றும் 49% குடியரசுக் கட்சியினர் உட்பட, பதிலளித்தவர்களில் 63% பேர் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கே நவம்பர் 8ம் திகதி நடக்கவிருக்கும் தேர்தலில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான காங்கிரஸின் கட்டுபாட்டை தீர்மானிக்கும் ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஜுன் மாத இறுதிக்குள் வெளிவரவிருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நடக்கவிருக்கும் தேர்தலில் முக்கிய மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் குடியரசுக் கட்சியினர் காங்கிரஸின் ஒரு பகுதியை மட்டுமாவது கைப்பற்றி விட வேண்டும் என விரும்புகின்றனர், அப்போது தான் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜோ பிடனின் சட்டமன்ற நிகழ்ச்சி நகர்வுகளை தடுக்க முடியும் என விரும்புகின்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: வெளிநாட்டிற்கு சென்றால் வாழ்க்கை மாறும் என நினைத்த தமிழ்ப்பெண்ணுக்கு நேர்ந்த கதி! எச்சரிக்கை செய்தி
இருப்பினும், 41 சதவிகித அமெரிக்க மக்கள் பெண்களின் கருக்கலைப்பு சுகந்திரத்தை ஆதரவளிக்கும் வேட்பாளருக்கே வாக்களிக்க இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், குடியரசு கட்சியல் 28 சதவிகித உறுப்பினர்கள் ஆதரவும், 29 சதவிகித உறுப்பினர்கள் எதிர்ப்பும் 36 சதவிகித உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க விருப்பம் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.