துக்க நிகழ்ச்சிகளில் காண்டம் ஏன்? வெளியான ரிப்போர்ட்
அமெரிக்காவில் பலர் துக்க நிகழ்ச்சிகளில் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்லும் 8ல் ஒருவர் ஆணுறைகளை தங்களுடன் எடுத்துச் செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் 18 முதல் 35 வரை வயதுள்ள 2 ஆயிரம் பேரிடம் பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
அப்போது, அந்த ஆய்வில் துக்க வீட்டில் தங்கள் மன சோகத்தை மறைக்க உடலுறவு கொள்வதாக பலர் தெரிவித்தனர்.
இத்தகவலைக் கேட்ட அந்நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மேலும், 65 சதவீதம் பேர் தங்கள் துணையுடன் பேட்டிங் செல்லும்போது ஆணுறைகளை எடுத்துச் செல்வதாக ஆய்வில் தெரியவந்தது.
52 சதவீதம் பேர் தினமும் கட்டிலுக்கு அருகில் ஆணுறைகளை வைத்துக் கொள்ள விரும்புவதாக அந்த ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன.