அமெரிக்க அதிபராவதற்கு இவருக்கு கொஞ்சம் கூட தகுதியில்லை... ஆப்கானிஸ்தான் பிரச்சினையால் மக்கள் ஆதரவை இழந்த இந்திய வம்சாவளியினர்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதற்கு அமெரிக்காதான் காரணம் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியுள்ளது.
அமெரிக்கா தன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக்கொண்டதாலேயே தாலிபான்களின் கை மீண்டும் ஓங்கியுள்ளது என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவு எதிர்பாராதவிதமாக இந்திய வம்சாவளியினரான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 49 சதவிகிதம் அமெரிக்கர்கள் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராவதற்கு தகுதியுடையவர் என கருத்து தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், அமெரிக்கா தன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு மக்களுடைய ஆதரவு குறைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை முழுமையாக வாபஸ் பெறுவது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பதற்கு முன், அதிபருடன் அந்த அறையிலிருந்த கடைசி நபர் நான்தான் என பெருமையாக கூறியிருந்தார் கமலா.
ஆனால், அந்த முடிவு தனது செல்வாக்கை பாதிக்கும் என கமலா சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
ஆம், இம்மாதம் (ஆகத்து) 12 முதல் 15 திகதிகளுக்குள் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, மக்கள் கமலா ஹாரிஸ் மீது கொண்டிருந்த எண்ணத்தை தலைகீழாக மாற்றியுள்ளது.
ஏப்ரலில் கமலா ஹாரிஸ் அதிபராவதற்கு தகுதியுடையவர் என 49 சதவிகிதம் மக்கள் வாக்களித்திருந்த நிலையில், இப்போது 47 சதவிகிதம் பேர், கமலா அதிபராவதற்கு கொஞ்சம் கூட தகுதியில்லாதவர் என வாக்களித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், முன்பெல்லாம் எந்த நிகழ்ச்சியானாலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பின்னாலேயே நிற்கும் கமலா, ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் தலை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.