பதிலடி கொடுக்கும் விதமாக பிரான்ஸ், ஜேர்மனிக்கு எதிராக அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு!
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலிருந்து இறக்குமதியாகும் விமானம் தொடர்பான பாகங்கள் மற்றும் ஒயின்கள் உள்ளிட்ட சில ஐரோப்பிய ஒன்றிய தயாரிப்புகளுக்கான இறக்குமதி கட்டணங்களை உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானம் உற்பத்தி செய்யும் பாகங்கள் மற்றும் சில தெளிவற்ற ஒயின்கள் மற்றும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த காக்னாக்ஸ் மற்றும் பிற பிராண்டிகள் மீதான கட்டணங்களைச் உயர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
உயர்த்தப்பட்ட கட்டணங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என்று USTR சொல்லவில்லை, ஆனால், இதுகுறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இது, முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுக்கு நியாயமற்ற முறையில் கட்டணங்களை விதித்தற்கான பதிலடியாக எடுக்கப்பட்டுள்ள முடிவு எனக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய விமான நிறுவனமான Airbus SE மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட போட்டியாளரான Boeing Co. சம்பந்தப்பட்ட சிவில் விமான மானியங்கள் தொடர்பான 16 ஆண்டுகால அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய மோதலுக்கு இடையில் எடுக்கப்பட்டுள்ள திருப்பமான நடவடிக்கையாக இந்த புதிய கட்டண உயர்வு பார்க்கப்படுகிறது.