போர்வைக்குள் உறங்கிய கருப்பின நபரை சுட்டுக்கொன்ற பொலிசார்: அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவில் Minneapolis நகரில் போர்வைக்குள் படுத்து இருந்த அமீர் லோக்கி (22) என்ற கறுப்பின நபரை அப்பகுதி பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் St.paul நகரில், நடந்த கொலையில் சம்பந்தபட்ட ஒரு குற்றவாளியை தேடிக்கொண்டு இருந்த Minneapolis பகுதி பொலிசார் தவறுதலாக அமீர் லோக்கி (22) அவரின் அறைக்குள் நுழைந்து சரணடையுமாறு கூறியுள்ளனர்.
போர்வைக்குள் படுத்து இருந்த அமீர் லோக்கி (22) திடீரென தன் முன் துப்பாக்கிகள் இருப்பதை பார்த்து பதறி அவரது கைத்துப்பாக்கியை எடுக்க முற்பட்டபோது பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்த காட்சிகள் பொலிசார் சட்டையில் பொருத்தப்பட்டிருக்கும் கமெராவில் பதிவாகியிருந்த நிலையில் அதனை தற்போது பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இதற்கு அமெரிக்கா துப்பாக்கி உரிமையாளர்கள் குழு கண்டம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து Minneapolis உரிமையாளர் காக்ஸ் பேசுகையில் அமீர் லோக்கி (22) ஒரு சட்டத்தை மதிக்கும் நபர் என்றும், அவரை சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றே துப்பாக்கி வைத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அமீர் லோக்கி (22) தன் முன் துப்பாக்கிகளை கண்டதும் குழம்பிப்போய் தன் தற்காப்பிற்காக துப்பாக்கியை எடுக்க முற்பட்டுள்ளார் என்பது இந்த வீடியோவில் தெளிவாக தெரிவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன் என்ற இடது சார்பு அமைப்பு, பொலிசார் லோக்கிடம் துப்பாக்கியை கைவிடுமாறு கேட்கவோ அல்லது சுடுவோம் என்று எச்சரிக்கவோ தவறிவிட்டதாகக் கூறியுள்ளது
இது குறித்து அமீர் லோக்கி (22) அவர்களின் தாயார் பேசுகையில், எனது மகன் எப்போதும் பொலிசாரிடம் நல்ல முறையில் நடப்பவன் என்றும், எனது குழந்தைகளுக்கு பொலிசாரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் 02/02/2022யில் எனது மகன் கொல்லப்பட்டு இருப்பதாகவும் அவனது கனவுகள் இன்று அழிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமீர் லோக்கி (22) கொல்லப்பட்டதிற்கு மக்கள் மத்தியில் பெரும் கண்டனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.