25 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுக்கு! ஓய்வை அறிவித்த இந்திய வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா, அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
அமித் மிஷ்ரா
2003ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானவர் அமித் மிஷ்ரா (Amit Mishra).
வலதுகை Leg break பந்துவீச்சாளரான இவர், இந்திய கிரிக்கெட் அணிக்காக 36 ஒருநாள் போட்டிகளில் 64 விக்கெட்டுகளும், 22 டெஸ்ட் போட்டிகளில் 76 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில், தொடர்ச்சியான காயங்கள் மற்றும் இளைய கிரிக்கெட் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்கிற விருப்பத்தை மேற்கோள் காட்டி, அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
25 ஆண்டுகள்
42 வயதாகும் அமித் மிஷ்ரா கூறுகையில், "கிரிக்கெட்டில் எனது இந்த 25 ஆண்டுகள் வாழ்க்கை மறக்க முடியாதது. இந்தக் காலமெல்லாம் என்னுடன் இருந்த பிசிசிஐ, நிர்வாகம், ஹரியானா கிரிக்கெட் சங்கம், துணை ஊழியர்கள், எனது சக ஊழியர்கள் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
நான் விளையாடிய போதெல்லாம், எங்கிருந்தாலும் அன்பும் ஆதரவும் இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கிரிக்கெட் எனக்கு எண்ணற்ற நினைவுகளையும், விலைமதிப்பற்ற கற்றல்களையும் அளித்துள்ளது.
மேலும், மைதானத்தில் உள்ள ஒவ்வொரு தருணமும் நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக வைத்திருக்கும் ஒரு நினைவாக இருந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |