36 ஆண்டுகால சாதனையை தூளாக நொறுக்கிய டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்
செர்பிய ஜாம்பவான் வீரர் நோவக் ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் புதிய கிராண்ட்ஸ்லாம் சாதனையைப் படைத்தார்.
ஜோகோவிச்
நியூயார்க்கில் கிராண்ட்ஸ்லாம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில், செர்பிய ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic) 6-3, 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தினார்.
36 ஆண்டுகால சாதனை
இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச் 36 ஆண்டுகால சாதனை ஒன்றை முறியடித்தார்.
அதாவது, அமெரிக்க ஓபன் அரையிறுதியில் 53வது முறையாக நுழைந்ததன் மூலம், கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் 52 முறை விளையாடிய கிறிஸ் எவெர்ட்டின் (Chris Evert) 36 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
மேலும், 38 வயதாகும் ஜோவோவிச் ஒரே சீசனில் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களிலும் அரையிறுதிக்கு முன்னேறிய வயதான வீரர் எனும் சாதனையை செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |