ஜிம்பாப்வேயை சூறையாடிய கமிந்து மெண்டிஸ்! கடைசி ஓவரில் மிரட்டல் வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிரையன் பென்னெட் 81 ஓட்டங்கள்
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய முதல் டி20 போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது.
முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்கு 175 ஓட்டங்கள் குவித்தது. பிரையன் பென்னெட் (Brian Bennett) 57 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் விளாசினார். துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய இலங்கை அணியில் பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ் கூட்டணி 61 பந்துகளில் 96 ஓட்டங்கள் குவித்தது.
அரைசதம் அடித்த பதும் நிசங்கா (Pathum Nissanka) 32 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
கமிந்து மெண்டிஸ் ருத்ர தாண்டவம்
அதனைத் தொடர்ந்து வந்த குசால் பெரேரா 4 ஓட்டங்களிலும், குசால் மெண்டிஸ் 38 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
நுவனிந்து பெர்னாண்டோ (7), அசலங்கா (1), தசுன் ஷானகா (6) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணிக்கு 18 பந்துகளில் 34 ஓட்டங்கள் தேவை என்ற நெருக்கடி ஏற்பட்டது.
அப்போது சரவெடி ஆட்டம் ஆடிய கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) 16 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 41 ஓட்டங்கள் விளாச, இலங்கை 19.1 ஓவரில் 177 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |