2,00,000 வாக்குகள் முன்னிலையில் அமித் ஷா: குஜராத்தில் பாஜக முன்னிலை
குஜராத் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் பாஜக கட்சியை ஏமாற்றாத வகையில் அதிகரித்து வருகிறது.
குஜராத்தின் நிலவரம்
குஜராத்தின் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளில் 25-ல் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
இதனிடையே, பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி குஜராத்தில் பாஜக 22 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலையுடன் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தொடங்கின.
அது விரைவில் பாஜக 25, காங்கிரஸ் 1 என்பதாக மாறியது. குஜராத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் அமித் ஷா முதலிடம் வகிக்கிறார்.
இந்தியாவின் எந்த மூலையில் தேர்தல் முடிவுகள் அடியோடு மாறினாலும், பாஜக பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கும் மாநிலமாக குஜராத் உள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா என இருபெரும் தலைவர்களை தந்த வகையில், குஜராத் பெரும் வெற்றியை பெற வேண்டிய நெருக்கடியிலும் பாஜக உள்ளது.
இந்த தேர்தலிலும் அக்கட்சி அதனை நிச்சயம் நிறைவு செய்யும் என்பதையே ஆரம்பகட்ட நிலவரங்கள் காட்டுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |