சக மாணவனை சரமாரியாக தாக்கிய மாணவியும் நண்பர்களும்... அதிர்ச்சியை உருவாக்கியுள்ள வீடியோ
இந்தியாவின் லக்னோவிலுள்ள அமிதி பல்கலையில் படிக்கும் ஒரு மாணவரை அவரது சக மாணவி ஒருவரும் வேறு சில மாணவர்களும் சேர்ந்து 45 நிமிடங்களுக்கு தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
அதிர்ச்சியை உருவாக்கியுள்ள வீடியோ
அந்த வீடியோவில், ஷிகார் (Shikhar Mukesh Kesarwani) என்னும் மாணவர் கார் ஒன்றின் பின் இருக்கையில் அமர்ந்திருக்க, முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மாணவி ஒருவர் எழுந்து ஷிகாரை சரமாரியாக அறைவதைக் காணலாம்.
அடி விழுவதைத் தடுக்க ஷிகார் முயல, கையைக் கீழே போடு என்று சொல்லிச் சொல்லி அந்தப் பெண் அறைகிறார்.
விடியோவை காண: https://x.com/Raghvendram14/status/1964016631736389797
அவரைத் தொடர்ந்து குறுக்கிடும் மற்றொரு மாணவரும் ஷிகாரைத் தாக்குகிறார். அத்துடன் மோசமான வார்த்தைகளால் ஷிகாரையும் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரையும் மோசமாக திட்டியுள்ளார்கள் அந்த மாணவர்கள்.
இந்த தாக்குதல் சுமார் 45 நிமிடங்களுக்கு நீடிக்கிறது. தன் மகனை அடித்தது ஜான்வி மிஷ்ரா என்னும் இளம்பெண்ணும், ஆயுஷ் யாதவ் என்னும் பையனும் என்கிறார் ஷிகாரின் தந்தை.
அத்துடன், 50 முதல் 60 முறை அவர்கள் ஷிகாரை அறைந்ததாகவும், ஷிகாருக்கு தசைநார் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் ஊன்றுகோல் உதவியுடன்தான் நடமாடுவதாகவும் தெரிவித்துள்ளார் அவரது தந்தை.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, ஜான்வி மிஷ்ரா, ஆயுஷ் யாதவ், மிலய் பானர்ஜி, விவேக் சிங் மற்றும் ஆர்யமான் ஷுக்லா ஆகிய ஐந்து பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் ஆண்டு சட்டம் பயின்று வந்த ஷிகார் பயந்து தன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
101 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், ஷாகிரை அந்த மாணவியும் மற்றவர்களும் எதற்காக தாக்கினார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |