வெள்ளத்தில் சிக்கிய 6 பாடசாலை மாணவர்கள் - ஒருவர் சடலம் மீட்பு!
அம்பாறை மாவட்டம் காரைதீவில் நேற்று (26) மாலை வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ஆறு மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
11 பாடசாலை சிறுவர்கள், சாரதி, உதவியாளர் உட்பட 13 பேருடன் பயணித்த உழவு இயந்திரம், வெள்ள நீரில் பலத்த நீரோட்டம் காரணமாக கவிழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
05 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நிந்தவூரில் உள்ள மத்ரஸா பாடசாலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் காரைதீவு பேடூந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பாலத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணாமல் போன சிறுவர்கள் 12 மற்றும் 16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, காணாமல் போன குழந்தைகளில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் காணாமல் போனவர்களைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |