முழு சார்ஜில் 136 km செல்லும் Ampere நிறுவனத்தின் Electric Scooter! மொடல் மற்றும் விலை விவரங்கள்
ஆம்பியர் (Ampere) எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய புதிய மொடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய தகவலை பார்க்கலாம்.
Ampere Nexus Electric Scooter
ஆம்பியர் (Ampere) எலெக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆம்பியர் நெக்ஸஸ் (Ampere Nexus) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் முதல் முதல் ரூ.1.20 லட்சம் வரை (Ex-showroom) என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அடிப்படை EX (ரூ. 1.10 லட்சம்), மற்றும் top-spec ST (ரூ. 1.20 லட்சம்) ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது.
இந்த ஸ்கூட்டர் Zanskar Aqua, Lunar White, Indian Red மற்றும் Steel Grey என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. இதில், 4 KW electric motor வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்கூட்டர் power mode -ல் மணிக்கு 93 கிலோமீட்டர் வேகத்திலும், city mode -ல் மணிக்கு அதிகபட்சம் 63 கிலோமீட்டர் வேகத்திலும், Eco mode -ல் மணிக்கு அதிகபட்சம் 42 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும்.
மேலும், ஸ்கூட்டரின் Battery அளவு 20 சதவீதத்திற்கும் கீழ் குறையும் போது Limb Home mode செயல்படுத்தப்படுகிறது. இதுதவிர Reverse mode வசதியும் உள்ளது.
இதில், 3 Kilowatt hour, IP67 தர பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை நாம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 136 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். குறிப்பாக 15A மற்றும் 25A என இரண்டு Charging options உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |