ரூ.20,000 -க்கும் குறைவான விலையில் நல்ல AC வாங்கலாம்! முழு பட்டியல் இதோ
கோடை காலத்தை சமாளிப்பதற்கு ரூ.20,000 -க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஏசிக்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில இடங்களில் வெயில் அளவுக்கதிமாக வெளுத்து வாங்குகிறது.
கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.
ஆனால், ஏசியின் விலையை பார்க்கும் போது தலைசுற்றும் அளவுக்கு வந்துவிடும். ஏனென்றால் ரூ.30,000-க்கு குறையாமல் ஏசி விற்பனை செய்யபடுவதில்லை. இதனால் மக்கள் பெரிதும் கவலை கொள்கின்றனர்.
ரூ.20,000 -க்கும் குறைவான AC
* MarQ FKAC103SFAA என்ற ஏசியின் விலை வெறும் ரூ.18,888 மட்டுமே. இந்த 3 ஸ்டார் ரேட்டிங் ஏசிக்கு 230 வி 50 Hertz மின்சாரம் தேவைப்படும். இந்த ஏசி 1 டன் கொள்ளளவு கொண்டது ஆகும்.
* Panasonic CU-YN12WKYM என்ற 1 டன் ஏசியின் விலை ரூ.19,245 ஆகும். இந்த ஏசியானது 3 ஸ்டார் ரேட்டிங் கொண்டது. இதில் இன்வெர்ட்டர் (Inverter) வசதியும் உண்டு.
* Hyundai HS4F33.GCR-CM என்ற ஏசியின் விலை ரூ.19,499 ஆகும். இந்த ஏசியானது 3 ஸ்டார் ரேட்டிங் கொண்டது. இந்த 1 டன் ஏசியில் இன்வெர்ட்டர் (Inverter) வசதி இல்லை.
* LG LWA5GW3A என்ற 1.5 டன் ஏசியின் விலை ரூ.19,999 ஆகும். இது 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட விண்டோ ஏசி (Window AC) ஆகும். இதில் இன்வெர்ட்டர் (Inverter) வசதி இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |