ஆசிய நாட்டு முதியவரை ஓடி வந்து மிதிக்கும் அமெரிக்கர்... ஒரு பயங்கர வீடியோ
அமெரிக்காவில் ஆசியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், ஆசிய நாட்டு முதியவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் கொடூரமாக தாக்கப்பட்ட முதியவர் ஒருவர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் திகதி, சான் பிராசிஸ்கோவில் தன் வாக்கரில் அமர்ந்தபடி பேருந்து ஒன்றிற்காக காத்திருந்தார் Rong Xin Liao (84). அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், ஒரு இளைஞர் ஓடி வந்து Liaoவை மிதிக்க, படாரென்று தரையில் மோதி விழுந்துள்ளார் அவர்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், Liao தாக்கப்படும் அந்த பயங்கர காட்சியைக் காணலாம். அதன் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Liaoவுக்கு தலையில் ஆறு தையல்கள் போடப்பட, நான்கு இரவுகள் அவர் மருத்துவமனையில் செலவிட்டிருக்கிறார்.
பின்னர் Liaoவைத் தாக்கிவிட்டு தப்பியோடிய Eric Ramos-Hernandez (23) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இப்போதும் மறையாத தழும்புடன் வாழும் Liao, அந்த பயங்கர சம்பவத்தை நினைவுகூருகிறார்.
தற்போது அமெரிக்காவில் ஆசிய நாட்டவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்காவில் வாழும் ஆசிய நாட்டு முதியவர்கள் கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளார் அவர்.
இம்மாத துவக்கத்தில், இதே சான் பிரான்சிஸ்கோவில், 70 வயது பெண்மணி ஒருவரை ஒரு வெள்ளையர் தாக்க, அவரை அந்த பெண்மணி அடித்து நொறுக்கிய செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.
அதேபோல், நியூயார்க்கில் சில நாட்களுக்கு முன் வயது முதிர்ந்த இலங்கையர் ஒருவர் தாக்கப்பட்டிருக்கிறார்.
அத்துடன், அதே நியூயார்க்கில், ஒரு 25 வயது ஆசிய பெண் மீது அமெரிக்கர்கள் சிறுநீர் கழித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் ஆசிய நாட்டவர்கள் மீதான இனவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.


