ஆண்டுக்கு ரூ. 30 கோடியை நன்கொடையாக அள்ளிக்கொடுக்கும் நடிகர்: யார் தெரியமா?
அமிதாப் பச்சன், சல்மான் கான், விஜய், அஜித் உள்ளிட்ட பலரும் சமூக நலன்களுக்காக நன்கொடை அளித்து வருகின்றனர்.
சல்மான் கானின் பீயிங் ஹியூமன் என்ற அமைப்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உதவுகிறது.
கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு சோனு சூட் தொடர்ந்து மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
அந்தவகையில், இந்தியாவின் மிகப்பெரிய நன்கொடையாளர் யார் தெரியுமா? அவர் டோலிவுட் இளவரசர் மகேஷ் பாபுதான்.
இந்தியத் திரையுலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் மகேஷ் பாபு, பல ஏழைகளுக்கு வாழ்வளித்தவர்.
திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் கோடிக்கணக்கில் நடிகர் மகேஷ் பாபு சம்பாதிக்கிறார்.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் ரூ. 25 முதல் 30 கோடி வரை ஏழைகளுக்காக செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.
மகேஷ் பாபு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
அவரே ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையை நடத்தி வருகிறார். அங்கு ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுகிறார்.
இதுவரை மகேஷ் பாபு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி தனது மாநிலத்தில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார். சாலைகள், மின்சாரம், பள்ளிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர்.
மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு ரூ. சுமார் 300 கோடி உள்ளது. ஹைதராபாத்தில் அவருக்கு ரூ.30 கோடி மதிப்பில் சொந்தமாக பங்களா உள்ளது.
ஜூப்ளி ஹில்ஸில் உள்ள இந்த வீட்டில் கிட்டத்தட்ட அனைத்து ஹைடெக் வசதிகளும் உள்ளன. மேலும், மகேஷ் பாபுவிடம் 7 கோடி மதிப்புள்ள வேனிட்டி வேன் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |