AI தொழில்நுட்ப ரோபோ மக்களை தாக்க முயன்றதால் பரபரப்பு! அதிர்ச்சியடைய வைக்கும் வீடியோ
சீனாவில் AI தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ மக்களை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி வீடியோ
சீனாவில் மக்கள் அதிகமானோர் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில் செயற்கை நுண்ணறிவால் (Artificial intelligence) கட்டுப்படுத்தப்படும் ரோபோ இருந்தது.
இந்த ரோபோவானது திடீரென மக்களை தாக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் பரவும் வீடியோவில், மக்கள் கூடிய நிகழ்ச்சியில் மனித உருவ ரோபோ அங்கு கூடியிருந்தவர்களில் சிலரை நோக்கி முன்னேறி சென்று தாக்க முயற்சிக்கிறது.
அதாவது மென்பொருள் கோளாறால் ஏஐ ரோபோ மனிதர்களை தாக்குகிறது. இதில், யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இந்த வீடியோவை பார்க்கும் போது வரும் காலங்களில் ஏஐ தொழில்நுட்பத்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதை காட்டுகிறது.
🚨🇨🇳AI ROBOT ATTACKS CROWD AT CHINESE FESTIVAL
— Mario Nawfal (@MarioNawfal) February 25, 2025
A humanoid robot suddenly stopped, advanced toward attendees, and attempted to strike people before security intervened.
Officials suspect a software glitch caused the erratic behavior, dismissing any intentional harm.
This comes… pic.twitter.com/xMTzHCYoQf
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |