வீட்டில் சுத்தம் செய்பவர் கண்டுபிடித்து கொடுத்த லொட்டரியால் கோடீஸ்வரரான அமெரிக்கர்
அமெரிக்காவில் உள்ள ஒருவரின் வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த லொட்டரிக்கு ரூ.8 கோடி பரிசு கிடைத்துள்ளது.
வீட்டுக் குவளையில் கிடைத்த லொட்டரி
அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் கலீல் சவுசா. இவர், ஒரு மாதத்திற்கு முன்பு லொட்டரி ஒன்று வாங்கியுள்ளார். அதனை, அவரது வீட்டில் எதோ ஒரு இடத்தில் வைத்துவிட்டார்.
இந்நிலையில், அண்மையில் தான் இந்த லொட்டரி சீட்டிற்கு பரிசு அறிவிப்பு வந்தது. இதனால், தனது வீடு முழுவதும் லொட்டரியை தேடிய கலீல் சவுசாவுக்கு உடனடியாக கிடைக்கவில்லை.
பின்பு, அவரது வீட்டில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர் வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது, வீட்டின் குவளைக்குள் லொட்டரி சீட்டு இருந்துள்ளது.
1 மில்லியன் டொலர் பரிசு
இதனைத்தொடர்ந்து, துப்புரவு பணியாளர் லொட்டரியை கலீல் சவுசாவிடம் கொடுத்துள்ளார். அவர் வைத்திருந்த லொட்டரிக்கு 1 மில்லியன் டொலர் பரிசு கிடைத்தவுடன் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்திய மதிப்பில் அந்த பரிசுத்தொகை ரூ.8.34 கோடி ஆகும். இந்த பரிசுத்தொகையில் வரிப்பிடித்தம் போக அவருக்கு ரூ.5.50 கோடி கிடைக்கும்.
அந்த பரிசுத் தொகையை வைத்து தேவைப்படும் நண்பர்களுக்கு உதவுவதாகவும், தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதாகவும் கலீல் சவுசா கூறினார்.