இரட்டைக்கோபுர தாக்குதலை விட மோசமான தாக்குதல் நடக்கும்: மறுபிறவி எடுத்துள்ள ஜோதிடக் கலைஞர் எச்சரிக்கை
பிரேசில் நாட்டவரான Athos Salomé (36) என்பவர், தன்னை பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரான நாஸ்ட்ரடாமஸின் மறுபிறவி என அழைக்கிறார்.
அவர் அமெரிக்காவில் மோசமான ஒரு தாக்குதல் ஒன்று நடக்க இருப்பதாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டைக்கோபுர தாக்குதலை விட மோசமான ஒரு தாக்குதல் ஒன்று நடக்க இருப்பதாக எச்சரித்துள்ளார் ஜோதிடக் கலைஞர் ஒருவர்.
பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரான நாஸ்ட்ரடாமஸின் மறுபிறவி என அழைக்கப்படும் பிரேசில் நாட்டவரான Athos Salomé (36) என்பவர்தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தான் ஏற்கனவே பிரித்தானிய மகாராணியாரின் மறைவு, கோவிட் மற்றும் மூன்றாம் உலகப்போர் குறித்து கணித்து கணித்ததாக தெரிவிக்கும் Athos, அடுத்த ஆண்டு, அல்லது 2024 அல்லது 2026இல், துரோகம் அல்லது ஊடுருவல் போன்ற ஏதாவது ஒரு காரணத்தால் அமெரிக்காவுக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக எச்சரித்துள்ளார்.
இரண்டு பெரிய தலைவர்கள் இணைந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவார்கள் என்றும், அந்த தாக்குதல், 2,996 உயிர்களை பலிவாங்கிய செப்டம்பர் 11 தாக்குதலை விட மோசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் Athos.
தான் பயத்தையும் திகிலையும் உருவாக்குவதற்காக இவற்றைக் கூறவில்லை என்று கூறும் Athos, அப்படிப்பட்ட பயங்கரங்கள் நிகழும் முன், அதிகாரிகள் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதற்காகவே தான் எச்சரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.