அலுவலகத்திற்கு 900 கி.மீ தூரம் வரை விமானத்தில் செல்லும் ஊழியர்.. ஏன் தெரியுமா?
பத்திரிகை நிருபர் ஒருவர் தினமும் விமானத்தில் அலுவலகம் சென்று வருகிறார் என்ற தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய சூழலில் அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு நமக்கு பெரும்பாடாக உள்ளது. போக்குவரத்து நெரிசலிலும், காற்று மாசுபாட்டிலும் மக்கள் தினமும் தவித்து வருகின்றனர். ஆனால், அமெரிக்காவில் ஒருவர் தினமும் விமானத்தில் 900 கி.மீ தூரம் அலுவலகம் சென்று வருகிறார்.
என்ன காரணம்?
அமெரிக்காவின் ஒஹியோவில் வசிப்பவர் சிப் கட்டர் (Chip Cutter). இவர், அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜெர்னலின் நிருபராக உள்ளார். கொரோனா கால கட்டத்திற்கு முன்பு நியூயார்க்கில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார்.
அதன் பிறகு அங்கிருந்து காலி செய்து விட்டு ஓஹியோவுக்கு வந்து அலுவலக பணியை மேற்கொண்டுள்ளார். அதனால் சிப் கட்டருக்கு அந்த வாழ்க்கை பிடித்து விட்டது.
பின்னர் கொரோனா குறைந்த நிலையில் அவருக்கு நியூயார்க் செல்ல விருப்பமில்லை. அங்குள்ள வாழ்க்கை சூழல் அவருக்கு ஒத்துப் போகவில்லை.
விமான பயணம்
இதனால் சிப் கட்டர், நியூயார்க்கிற்கு செல்லாமல் ஓஹியோவில் இருந்து விமானம் மூலம் அலுவலகம் சென்று வருகிறார். வாரத்திற்கு மூன்று முறை ஓஹியோவில் இருந்து 900 கி.மீ தூரம் வரை நியூயார்க்கிற்கு விமானத்தில் செல்கிறார்.
இப்படி செல்வது நியூயார்க்கில் இருப்பதை விட மலிவாக இருக்கிறது என்று கூறியுள்ளார். நியூயார்க்கில் உள்ள ஸ்டுடியோ குடியிருப்பில் வசிப்பதற்கு மாதத்திற்கு சுமார் 2,65,581 ரூபாயை அவர் செலவளித்துள்ளார். இந்த மாதிரி சூழலலால் விமான பயணம் சிறந்தது என்று சிப் கட்டர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |