26 ஆண்டுகளில் 1 நாள் மட்டுமே Leave போட்ட ஊழியர்! அதுவும் எதற்காக தெரியுமா?
26 ஆண்டுகள் பணியில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்த ஊழியரின் செயல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாகவே வேலைக்கு செல்பவர்களுக்கு வார இறுதி நாள் விடுமுறை எப்போது வரும் என்று தான் காத்துக் கொண்டிருப்பார்கள்.
அதுமட்டுமல்லாமல், சமீப காலமாக வாரத்தின் விடுமுறை நாட்களை அதிகரிப்பது, வேலை நாட்களை குறைப்பது போன்ற விவாதம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கும் சூழலில் ஊழியர் ஒருவர் தனது 26 ஆண்டுகள் பணி அனுபவத்தில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளார்.
யார் அவர்?
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அலுவலகப் பணியாளர் ஒருவர், 26 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்ததற்காக 'India Book of Records’ சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இவர் விடுமுறை எடுக்காதது மட்டுமல்லாது ஞாயிற்றுக் கிழமைகள், பண்டிகை தினங்கள் மற்றும் அலுவலகம் விடுமுறையின் போதும் பணியாற்றியுள்ளார்.
துவரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ( Dwarikesh Sugar Industries Ltd) நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றும் தேஜ்பால் சிங் என்பவர் தான் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
இந்நிறுவனத்தில் இவர்,1995 -ம் ஆண்டு டிசம்பர் 26 -ம் திகதி முதல் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2003 -ம் ஆண்டில் ஒரே ஒரு நாள் மட்டும் தனது சகோதரனின் திருமணத்திற்காக விடுமுறை எடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் 45 நாட்கள் விடுமுறையை நிறுவனம் அளித்தாலும் இவர் ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளார்.
மனைவி, இரண்டு தம்பிகள் மற்றும் நான்கு குழந்தைகள் என் பெரிய குடும்பத்துடன் வாழ்ந்து வரும் தேஜ்பால் சிங், ஒரு நாள் கூட அலுவலகத்திற்கு தாமதமாக வந்ததில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |