பதவி ஆசை இல்லாத ராகுல்; விஜய்க்கு தேசிய அளவில் முக்கியத்துவம்? ஆனந்த் ஸ்ரீனிவாசன் பதில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவராக உள்ள ஆனந்த் சீனிவாசன், தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
முதுகில் குத்திய கருணாநிதி
இதில் பேசிய அவர், "மோடி நேருவின் சாதனையை முறியடித்து விட்டார் என்பது தவறான ஒன்று. 1935 ஆம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் உள்ளது. 1946 ஆம் ஆண்டிலே நேரு பிரதமர் ஆகிறார். அந்த அரசு தான் அரசியலமைப்பையே உருவாக்குகிறது.

அண்ணாமலையை இவர்களே வெளியே அனுப்பி, இன்னொரு கட்சியை உருவாக்கியுள்ளார்கள். யாரும் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு போக மாட்டார்கள். எங்கள் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார்கள். யாரும் சோனியாகாந்தியை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு போகவில்லை.
அண்ணாமலையின் கட்சி பாஜகவின் சி டீம். இந்தியா கூட்டணி தமிழகத்தில் நன்றாக தான் உள்ளது. திமுகவிற்கு பதிலாக தவெக வந்துள்ளது. திமுகவின் முதுகில் நாங்கள் குத்தவில்லை. பாஜகவுடன் சேர்ந்து கருணாநிதி தான் இஸ்லாமியர்களின் முதுகில் குத்தினார்.
நாங்கள் தவெகவிற்கு ஆதரவு தராவிட்டால், அமித்ஷா தவெக கைப்பற்ற முயற்சித்திருப்பார்.
ராகுல் காந்திக்கு பதவி ஆசையில்லை
ராகுல் காந்திக்கு பதவி ஆசையில்லை. அவர் ஒருமுறை ராஜஸ்தானில் பேசும் போது, power is poison என பேசினார் அதனால் அவர் அதிகாரத்திற்கு வருவது சந்தேகம்தான்" என பேசியுள்ளார்.
விஜய்யை தேசிய அளவில் முன்னிலைப்படுத்த திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு," காங்கிரஸ் வெற்றி பெற்றால், காங்கிரஸ் தலைமை கைகாட்டுபவர்தான் பிரதமர்.
திராவிட அரசியல் வேண்டாம் என மக்கள் வாக்களித்துள்ளார்கள். அடுத்த 15 ஆண்டுகள் திராவிட அரசியலை இல்லாமல் செய்வது தான் விஜய் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் செய்யும் தொண்டு" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |