இதை உருவாக்குங்க.. நான் முதலீடு செய்ய தயார்: பிரபல தொழிலதிபரின் அறிவிப்பு
ரோபோக்களின் தேவை நாட்டில் அதிகமாக உள்ளது குறித்து பிரபல தொழிலதிபர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலத்தில் ரோபோக்களின் தேவை அதிகரித்து உள்ளது. குறிப்பாக மனிதர்களின் அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் எளிமையாக செய்வதால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, மனிதனை விட வேகமும், திறனும் நிறைந்த ஒரு உயிற்ற மின்னணு கருவியாக ரோபோக்கள் உள்ளது.
குப்பை அள்ளும் ரோபோ
இந்நிலையில், ஆற்றில் உள்ள குப்பைகளை ரோபோ ஒன்று அகற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை தொழிலதிபரும், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர், சமூக பிரச்சனை தொடர்பான கருத்துக்களை அடிக்கடி பதிவிடுவது வழக்கம். அதே போல, தற்போது மாசுபாடு குறித்து பேசியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ரோபோ ஒன்று ஆற்றில் உள்ள குப்பைகளை அள்ளுவது போன்ற வீடியோவை பகிர்ந்து, இந்த ரோபோ சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும், இதைப்போல ரோபோக்கள் நமது நாட்டுக்கும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
Autonomous robot for cleaning rivers.
— anand mahindra (@anandmahindra) February 2, 2024
Looks like it’s Chinese?
We need to make these….right here…right now..
If any startups are doing this…I’m ready to invest…
pic.twitter.com/DDB1hkL6G1
மேலும் அவர், "இதுபோன்ற அதிநவீன ரோபோக்களை உருவாக்க வேண்டும் என்றும், இதுபோன்ற ரோபோக்களை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பேன்" என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |