விநாயக சதுர்த்திக்கு 20 கிலோ தங்க கிரீடத்தை வழங்கிய ஆனந்த் அம்பானி - அதன் விலை எவ்வளவு தெரியுமா?
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, சமீபத்தில் மும்பையின் லால்பாக்சா ராஜாவுக்கு (Lalbaugcha Raja) ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க கிரீடத்தை வழங்கியுள்ளார்.
தங்க கிரீடத்தை வழங்கிய ஆனந்த் அம்பானி
மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்களுக்கு வெகு விமர்சையான கொண்டாடப்படும்.
இந்த ஆண்டிறான விநாயகர் சதுர்த்தி நாளை ஆரம்பமாகிறது. இதை கொண்டாடுவதற்காக மும்பை நகரம் கடந்த சில நாட்களாக தயாராகி வருகிறது.
மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா (Lalbaugcha Raja) விநாயகரை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டு லால்பாக்சா ராஜா விநாயகர் 20 கிலோ எடைக்கொண்ட தங்க நகையுடன் காட்சியளிக்கவுள்ளார்.
இந்த கிரீடத்தை முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ஆனந்த் அம்பானி கணேஷோத்ஸவ நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்பதுடன், கிர்கான் சௌப்பட்டி கடற்கரையில் நடக்கும் நீரில் மூழ்கும் விழாவில் கலந்து கொள்வார்.
குறித்த தங்க கிரீடமானது இரண்டு மாதங்களுக்கும் மேலாக உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட அற்புதமான சிறப்பம்சத்தை பெற்றுள்ளது.
लालबागचा राजाचे, प्रसिद्धी माध्यमांसाठी फोटो सेशन गुरुवार दिनांक 5 सप्टेंबर 2024 रोजी संध्याकाळी ठिक 7 वाजता करण्यात आले आहे. त्या वेळेची क्षणचित्रे.#lalbaugcharaja
— Lalbaugcha Raja (@LalbaugchaRaja) September 5, 2024
Exclusive live on YouTube :https://t.co/XAHhCLjBM6 pic.twitter.com/fg07hI096z
கோஷங்கள் மற்றும் கலகலப்பான இசைக்கு மத்தியில் விநாயகர் சிலைகள் தண்ணீரில் கரைக்கப்படும் பிரமாண்டமான தரிசனத்தில் இந்த நிகழ்வு முடிவடையும்.
மேலும் அம்பானி இல்லத்தில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |