அம்பானியின் இளைய மகன் அனந்த் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் செயல் இயக்குனராக நியமனம்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் செயல் இயக்குனராக அனந்த் அம்பானி நியமீட்கப்பட்டுள்ளார்.
ஆசியாவின் பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, மே 1, 2025 முதல் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் செயல் இயக்குனராக (Executive Director) ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
2023 ஆகஸ்டில், முகேஷ் அம்பானி தனது மூன்று பிள்ளைகளான ஈஷா, ஆகாஷ் மற்றும் அனந்த் ஆகியோரை நிறுவனம் மற்றும் அதன் பல்வேறு பிரிவுகளின் இயக்குநர்கள் குழுவில் சேர்த்திருந்தார். இதில், அனந்த் ரிலையன்ஸின் புதிய எரிசக்தி துறையை கண்காணித்து வந்தார்.
இப்போது வெளியான ரிலையன்ஸ் அறிவிப்பில், மே 1, 2025 முதல் அனந்த் அம்பானி, நிர்வாக இயக்குநராக பணியேற்க இருப்பதாகவும், இது உறுப்பினர்களின் ஒப்புதலுக்குப் பின் அமுலாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அனந்த், பிரபலமான அமெரிக்காவின் ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்றவர். அவர் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி லிமிட்டெட் மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி லிமிட்டெட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும், ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனில் (தனியார் தொண்டு அமைப்பு) உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
முக்கியமாக, அனந்த் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தில் செயல் இயக்குநராக நியமிக்கப்படும் முதல் அம்பானி குடும்ப உறுப்பினராக இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Anant Ambani Executive Director, Reliance Industries leadership, Anant Ambani Reliance Industries, Mukesh Ambani succession plan, Reliance Industries latest news, Anant Ambani new role 2025, Reliance Industries board appointments, Anant Ambani Brown University, Anant Ambani energy business, Reliance Industries management change