இந்தியாவின் இளம் மில்லியனரான 17 மாத குழந்தை
இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் 17 மாதங்களே ஆன பேரக்குழந்தை இந்தியாவின் இளம் மில்லியனராகியுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் பேரன், ஏகாக்ரா ரோஹன் மூர்த்தி, பிறந்து 17 மாதங்களிலேயே இந்தியாவின் இளம் மில்லியனராக பெயர் பெற்றுள்ளார்.
ரோஹன் மூர்த்தி மற்றும் அபர்ணா கிருஷ்ணனின் மகனான ஏகாக்ரா, நாராயணமூர்த்தி மற்றும் ராஜ்யசபா எம்பி சுதா மூர்த்தியின் மூன்றாவது பேரனாவார். இவர் 2023 நவம்பரில் பெங்களூருவில் பிறந்தார்.
அவரது மூத்த பேத்திகளான கிஷனா மற்றும் அனுஷ்கா, முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தியின் மகள்கள் ஆவர்.
ஏகாக்ரா, இப்போது இன்ஃபோசிஸில் 15 லட்சம் ஷேர்களை சொந்தமாக கொண்டுள்ளார், இது அந்நிறுவனத்தின் 0.04 சதவீத பங்காகும்.
இந்த பங்குகள் அவருக்கு நான்கு மாதக் குழந்தையாக இருந்தபோது, 2024 மார்ச்சில், நாராயணமூர்த்தி வழங்கினார். அப்போது இந்த பங்குகளின் மதிப்பு ரூ.240 கோடியாக உயர்ந்துள்ளது.
இன்ஃபோசிஸ் 2025 மார்ச் முடிவில் ரூ.22 பங்கு இறுதி லாபமாக அறிவித்துள்ளது. ஏகாக்ராவின் பங்குகளுக்கேற்ப அவருக்கு ரூ.3.3 கோடி லாபம் கிடைக்கவுள்ளது.
இதற்கு முந்தைய இடைலாபமாகவே அவர் ரூ.7.35 கோடி பெற்றிருந்தார். இதனால் 2024-25 நிதியாண்டில் மட்டும் அவர் ரூ.10.65 கோடி சம்பாதித்துள்ளார்.
இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பின்படி ஒருவர் ரூ.8.55 கோடி வைத்திருந்தால் அவர் மில்லியனர் ஆவார்.
இந்த லாபத்தால் ஏகாக்ரா மட்டுமல்ல, நாராயணமூர்த்தி ரூ.33.3 கோடி, சுதா மூர்த்தி ரூ.76 கோடி, மற்றும் அக்ஷதா மூர்த்தி ரூ.85.71 கோடி பெறவுள்ளனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனம் 1981-ல் ரூ.10,000 முதலீட்டுடன் துவங்கி, இன்று உலகளாவிய தொழில்நுட்ப முன்னோடியாக விளங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |