கண்களை மயக்கிய மலர் சிற்பங்கள் முதல் 2,500 வகை உணவுகள் வரை: அம்பானி வீட்டு திருமணம்
ஆனந்த அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டங்கள் வெளிநாட்டில் தொடங்கி மும்பையில் பிரபலங்கள் நிறைந்த விழா வரை, உண்மையான பிரமாண்டத்தை வெளிப்படுத்தின.
காசியாக மாறிய ஜியோ வேர்ல்ட் சென்டர்
கொண்டாட்டங்களின் மையப்புள்ளியான ஜியோ வேர்ல்ட் சென்டர், காசி புனித நகரத்தால் ஈர்க்கப்பட்ட மயக்கும் அதிசய உலகமாக மாற்றப்பட்டது.
செயற்கையான கால்வாய் மற்றும் நீர்வீழ்ச்சிக்கு அருகில், ஒவ்வொன்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 60 மிகப்பெரிய விலங்கு சிற்பங்களால் நிறைந்து இருந்தது.
அலங்காரத்தின் சிக்கலான விவரங்களும் மிகப்பெரிய அளவும் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது என்பதில் மாற்று கருத்து இல்லை.
2,500 உணவுகள்
திருமணத்தில் பரிமாறப்பட்ட சுவையான உணவுகளும் அனைவரையும் வியப்பில் தள்ளியது.
உணவுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு முழு தளத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உலகெங்கிலும் இருந்தும் சுமார் 2,500 உணவுகள் இருந்தன.
பிராந்திய சிறப்புகளிலிருந்து சர்வதேச உணவு மற்றும் உள்ளூர் தெரு உணவு கடைகள் வரை, என உணவு வகைகள் குவிக்கப்பட்டு இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |