ஓமன் கடற்கரையில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்: 13 இந்தியர்கள், 3 இலங்கையர்கள் மாயம்
ஓமன் கடற்கரையில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் கொண்ட குழு காணாமல் போயுள்ளனர்.
எண்ணெய் கப்பல் விபத்து
ஓமன் கடற்கரையை ஒட்டி 25 கடல் மைல் தொலைவில் திங்கள் கிழமை, கொமரோஸ் கொடியில் இயங்கும் "ப்ரெஸ்டீஜ் பால்கன்”(Prestige Falcon) என்ற எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
13 இந்தியர்கள் மற்றும் 3 இலங்கை கப்பல் ஊழியர்கள் உட்பட 16 பேர் கொண்ட குழுவினர் தற்போது கப்பலுடன் கடலில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளனர்.
Updates regarding the recent capsizing incident of the Comoros flagged oil tanker southeast of Ras Madrakah pic.twitter.com/PxVLxlTQGD
— مركز الأمن البحري| MARITIME SECURITY CENTRE (@OMAN_MSC) July 16, 2024
தேடுதல் வேட்டை
காணாமல் போன கப்பல் பணியாளர்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒமான் கடல் பாதுகாப்பு மையம் (MSC) தொடங்கியுள்ளது.
கப்பல் கவிழ்ந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
"ப்ரெஸ்டீஜ் பால்கன்" கப்பல், யேமன் துறைமுக நகரமான ஏடனு க்கு செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
2007 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 117 மீட்டர் நீளமுள்ள இந்த எண்ணெய் பொருட்கள் கப்பல், ஓமன் நாட்டின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு அருகில் இயங்கி வந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |