இந்திய தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை! அம்பானி வீட்டு திருமணத்தில் குவியும் பிரபலங்கள்
ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கும் விருந்தினர்களின் பட்டியல்கள் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட திருமணம்
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற 'சங்கீத்' விழாவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் இன்று (ஜூலை 12 -ம் திகதி) ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.
இதற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் வரவுள்ளதால், அவர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வெளியான பட்டியல்
இந்நிலையில், அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கலந்துகொள்ளும் பல துறை சார்ந்த பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தலைவர்கள்
* முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (Ram Nath Kovind, Former President)
* பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh, Defense Minister)
* உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath, Chief Minister of Uttar Pradesh)
* ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu, Chief Minister of Andhra Pradesh)
* ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் (Pawan Kalyan, Deputy Chief Minister of Andhra Pradesh)
* மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee, Chief Minister of West Bengal)
* தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin, Chief Minister of Tamil Nadu)
* தெலங்கானா எதிர்க்கட்சித் தலைவர் கே.டி.ராமராவ் (KT Rama Rao, Leader of Opposition, Telangana)
சர்வதேச தலைவர்கள்
* அமெரிக்க அரசியல் பிரபலம் ஜான் கெர்ரி (John Kerry, American political celebrity)
* முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர் (Tony Blair, former UK Prime Minister)
* முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson, former UK Prime Minister)
* இத்தாலியின் முன்னாள் பிரதமர் மாட்டியோ ரென்சி (Matteo Renzi, former Prime Minister of Italy)
* ஆஸ்திரியாவின் முன்னாள் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் (Sebastian Kurz, former Prime Minister of Austria)
* கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் (Stephen Harper, former Prime Minister of Canada)
* ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் (Carl Bildt, former Prime Minister of Sweden)
* மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (Mohammed Nasheed, former President of Maldives)
* அமீன் நாசர், தலைவர் & CEO, Aramco
* HE Khaldoon அல் முபாரக், CEO, நிர்வாக இயக்குனர், Mubadala
* கிம் கர்தாஷியன், ஊடக ஆளுமை, சமூகவாதி
* க்ளோ கர்தாஷியன், ஊடக ஆளுமை, சமூகவாதி
* Borje Ekholm, தலைவர் மற்றும் CEO, எரிக்சன்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |