மகன் திருமணத்தில் நீதா அம்பானி அணிந்திருந்த 180 காரட் வைர நெக்லஸ் - விலை எவ்வளவு தெரியுமா?
இளைய மகனின் திருமணத்தில் நீதா அம்பானி அணிந்திருந்த வைர நெக்லஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆனந்த் அம்பானி திருமணம்
ஆனந்த் அம்பானி தனது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சன்டினை திருமணம் செய்துள்ளார்.
மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரமாண்டமாக குறித்த திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ரன்வீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ். தோனி என பல பிரபலங்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் நீதா அம்பானி அணிந்திருந்த வைர நெக்லஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நீதா அம்பானியின் வைர நெக்லஸ்
மும்பையின் கான்டிலால் சோட்டாலால் நகைக்கடையைச் சேர்ந்த கைவினைஞர்களின் குழுவினரால் குறித்த நகை தயாரிக்கப்பட்டுள்ளது.
1,000 மணிநேரத்திற்கும் மேலாக அதன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
100 காரட் மஞ்சள் வைரமானது, வெட்டப்பட்ட வைரங்களால் சூழப்பட்டுள்ளது. 80-காரட் மரகதம் வெட்டப்பட்ட சொலிடர் துளியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஐந்து வரிசைகளில் அற்புதமான சொலிடர்களில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் விலையானது பல கோடிகளில் இருக்கும் என நகை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |