அம்பானி வீட்டு திருமணத்திற்கு ஜாம் நகரை தேர்ந்தெடுத்தது ஏன்? - ஆனந்த் அம்பானி விளக்கம்
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு ஜாம் நகர் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு ஆனந்த் அம்பானி விளக்கம் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் அம்பானி
திருமணம் உலக பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் மார்ச் மாதம் முதலாம் திகதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவிருக்கிறது.
இன்றைய தினத்தில் இருந்து விழாக்கள் ஆரம்பமாகவிருக்கிறது. மார்ச் 1 முதல் 3 ஆம் திகதி வரையில் ஜாம்நகர் முழுவதும் விழா ஆரம்பிக்கப்படவிருக்கிறது.
இந்நிலையில் திருமணத்திற்காக ஜாம் நகர் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கான காரணம் குறித்து ஆனந்த் அம்பானி விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
ஜாம் நகர் ஏன்?
இது குறித்து ஆனந்த் அம்பானி கூறியது, "இந்த இடத்தில் தான் நான் வளர்ந்தேன். இங்கு எனது திருமணத்தை நடத்துவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
இது என் பாட்டி பிறந்த ஊர். இது தாத்தா, அப்பா வேலை செய்த இடம்.
இந்தியாவில் திருமணம் செய்துக்கொள்வது என்பது பெருமை மற்றும் மகிழ்ச்சிக்குரிய விடயம் என பிரதம் கூறியிருந்தார்.
ஜாம் நகர் எனது வீடு. இது என் தாத்தாவின் மாமியார் வீடு என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். என்னுடை பூர்விகம் இந்த மண் என்பதால், எனது கல்யாணத்தை இங்கே கொண்டாடுறோம்." என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நிகழ்வுக்கான அனைத்து ஆயத்தங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முகநூல் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் அவரது மனைவியுடன் ஜாம் நகர் சென்றுள்ளார்.
இவர்களுடன் ஷாருக்கான், கௌரி, சுஹானா மற்றும் ஆர்யன் கான், அட்லி மற்றும் அவருடைய மனைவி, குழந்தை என பலரும் ஜாம் நகரிற்கு சென்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |