Chicken Pickle: கோழி இறைச்சியில் ஊறுகாய் செய்வது எப்படி?
Healthy Food Recipes
By Kirthiga
அசைவ பிரியர்களுக்கு கோழி இறைச்சி என்றாலே ஒரு பிரியம் தான். கோழி இறைச்சி வைத்து செய்யக் கூடிய அனைத்து விதமான உணவையும் விரும்பி எடுத்துக்கொள்வார்கள்.
சிலர் ஊறுகாய் பிரியராகவும் இருப்பார்கள். எப்போதும் எலுமிச்சை ஊறுகாய் மற்றும் நெல்லிகாய் ஊறுகாய் என்று சாப்பிடுவதற்கு பதிலாக கோழி இறைச்சி வைத்து எப்படி ஊறுகாய் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மசாலா தூள் அரைக்க
- பட்டை - 2 துண்டு
- ஏலக்காய் - 5
- கிராம்பு - சிறிதளவு
- தனியா - 4 மேசைக்கரண்டி
- சீரகம் - 2 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- வெந்தயம் - 1 தேக்கரண்டி
- சிக்கன் ஊறுகாய் செய்ய
- எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
அரைத்த மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு - 1 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - 1 கப்
- மிளகாய் தூள் - 1/2 கப்
- உப்பு - 2 மேசைக்கரண்டி
- எலுமிச்சை சாறு - 1 பழத்தின் சாறு
செய்முறை
- முதலில் கடாயில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, தனியா, சீரகம், கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து வறுத்துத்தெடுத்து ஆற வைத்துக்கொள்ளவும்.
- வறுத்தெடுத்து ஆற வைத்து அனைத்து பொருட்களும் ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து எலும்பில்லாத கோழி இறைச்சியில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
- பின் ஒரு கடாயில் மசாவில் ஊற வைத்துள்ள கோழி இறைச்சியை சேர்த்து தண்ணீர் இல்லாத அளவிற்கு வேக வைக்கவும்.
- அடுத்து அதில் நல்லெண்யை ஊற்றி கோழி இறைச்சியை மிதமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
- அதில் மிளகாய் தூள், உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா தூள் சேர்த்து 3 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.
- அடுப்பில் இருந்து இறக்கியவுடன் இறுதியாக எலுமிச்சை சாற்றை சேர்த்து கலக்கவும்.
- இதை ஒரு போத்திலில் அடைத்து வைத்து பயன்படுத்தினால் ஒரு மாத்திற்கு பயன்படுத்தலாம்.
- நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க வேண்டுமென்றால் குளிரூட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US