உலகின் மிகப்பெரிய இந்திய தேசிய கொடி: அந்தமான் கடலுக்கடியில் கின்னஸ் உலக சாதனை
அந்தமான் கடலுக்கு அடியில் மிகப்பெரிய இந்திய தேசிய கொடி விரிக்கப்பட்டு புதிய உலக கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் உலக சாதனை
அந்தமான் நிக்கோபாரில் உள்ள ஸ்வராஜ் தீவில் அமைந்துள்ள ராதா நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான இந்திய தேசிய கொடி விரிக்கப்பட்டு புதிய உலக கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய இந்திய தேசிய கொடியை கடலுக்கு அடியில் விரித்து கின்னஸ் உலக சாதனையில் அந்தமான் நிக்கோபார் அரசு இடம்பிடித்துள்ளது.
கடலுக்கடியில் விரிக்கப்பட்ட மூவர்ண இந்திய கொடியானது 60 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்டது.
Two hundred divers unfurl a 60x40m tricolour underwater at Swaraj Dweep to spotlight the Andaman and Nicobar Islands as a world diving hub, clinching a Guinness record for the largest flag unfurled underwater. #andaman #guinnessrecord #underwaterflag #tricolour #scubadiving… pic.twitter.com/NUWg14CH4j
— The Federal (@TheFederal_News) May 2, 2026
இந்த உலக சாதனை நிகழ்வில் அந்தமான் நிக்கோபாரின் வனத்துறை, காவல்துறை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றை சேர்ந்த 200 ஸ்கூபா டைவிங் வீரர்கள் பங்கேற்றனர்.
அந்தமான் நிக்கோபார் நிர்வாகத்தின் இந்த சாதனை முயற்சியை அங்கீகரித்து கின்னஸ் உலக சாதனை நடுவர் ரிஷிநாத் அதற்கான அதிகாரப்பூர்வமான சான்றிதழை வழங்கினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |