இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவர்: தூக்கு தண்டனை நிறைவேற்றிய ஈரான்
இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் 2 பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது.
இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானுக்கு எதிராக பிப்ரவரி 28ம் திகதி இராணுவ நடவடிக்கை அறிவித்தனர்.
அமெரிக்கா படைகள் நடத்திய முதல் அதிரடி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமெனி உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப் படையினர் முன்னெடுத்த இந்த போர் நடவடிக்கையில், இஸ்ரேலுக்கு பலர் உளவாளிகளாக செயல்பட்டதாக ஈரான் சந்தேகமடைந்துள்ளது.
அதன் அடிப்படையில் பலரை கைது செய்தும் ஈரானிய அதிகாரிகள் விசாரணை செய்து தண்டித்து வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படையினருக்கு உளவு பார்த்ததாக யாகோப் கரிம்போர் மற்றும் நாசர் பெக்ர்ஸாதே ஆகிய இரண்டு பேர் மீது ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

இஸ்ரேலின் உளவுத் துறையான மொசாட்டிற்கு யாகோப் பல்வேறு தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது, அதைப்போல நாசர் பெக்ர்ஸாதே நாட்டின் அணுசக்தி திட்டங்கள், அரசு மற்றும் மத தலைவர்கள் குறித்து முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரின் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஈரான் உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு இன்று மரண தண்டனையானது நிறைவேற்றப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |