மகன் மற்றும் மகளை ஏரில் பூட்டி உழுத விவசாயி - என்ன காரணம்?
விவசாயம் இந்தியாவின் முக்கிய தொழிலாக இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் பெரியளவில் வருமானம் ஈட்டுவதில்லை.
இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துகொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மகன் மற்றும் மகளை ஏரில் பூட்டி உழுத விவசாயி
இந்நிலையில், விவசாயி ஒருவர், விவசாய செலவுகளை கட்டுப்படுத்த தனது மகன் மற்றும் மகளை ஏரில் பூட்டி களை எடுத்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம், கடப்பா மாவட்டத்தின் மம்மு சிட்டுபள்ளே கிராமத்தை சேர்ந்த விவசாயி பண்டி சந்திரசேகர் ரெட்டி என்பவருக்கு 9.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், 3 ஏக்கர் நிலத்தில் கெமோமில்(Chamomile) பயிரிட்டுள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவருக்கு கூலிக்கு ஆட்களை வைத்து நிலத்தை உழுவது அதிக செலவாக இருக்கும். ஒரு ஏக்கருக்கு களையெடுக்க ரூ.3,000 ஆகும் என கூறப்படுகிறது.
இந்த செலவுகளை கட்டுப்படுத்த, தனது மகள் மற்றும் மகனை ஏரில் பூட்டி நிலத்தை உழுதுள்ளார். அவரது மகன் பட்டப்படிப்பும், மகள் இடைநிலை பட்டப்படிப்பும் படித்து வருவதாக கூறப்படுகிறது.
பயிர் அறுவடை செய்யப்படும் போது நிலைமை எப்படி இருக்கும் என தெரியாது. நல்ல விலை கிடைக்கும் என்றும், செலவுகளை சமாளிக்க முடியாமல் இதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |