சகோதரருக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரை மாய்த்த பெண்: என்ன எழுதியிருந்தார்?
இந்த முறை ராக்கி கட்ட முடியாது என கடிதம் எழுதி வைத்து இளம்பெண் உயிரை மாய்த்துள்ளார்.
ராக்கி கட்ட முடியாது
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயதான ஸ்ரீவித்யா, தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார்.
6 மாதங்களுக்கு முன், கிராம சர்வேயரான ராம் பாபு என்பவருடன் ஸ்ரீவித்யாவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், தனது சகோதரருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு ஸ்ரீவித்யா உயிரை மாய்த்துள்ளார்.

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை!
இந்த கடிதத்தில், " கவனமாக இரு தம்பி. இந்த முறை, நான் உனக்கு ராக்கி கட்ட முடியாமல் போகலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
கணவரின் கொடுமை
மேலும், "திருமணமான ஒரு மாதத்தில் இருந்தே, மது போதையில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் என்னை ராம் பாபு துன்புறுத்த தொடங்கினார்.
பிற பெண்களின் முன்னிலையில் என்னை எதற்கும் பயனற்றவள் என அவமானப்படுத்துவார்" என குறிப்பிட்டுள்ளார்.
கணவரின் கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியாமலே, ஸ்ரீவித்யா தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
ஸ்ரீவித்யாவின் கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |