19 வயதில் 8 ஆண்களுடன் திருமணம் - பணத்திற்காக நடந்த மோசடி
19 வயது, பணம் பறிக்கும் நோக்கில், 8 ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.
19 வயதில் 8 ஆண்களுடன் திருமணம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் நகரின் கர்ஜி தெருவை சேர்ந்த 19 வயதான முத்திரெட்டி வாணி என்ற பெண்ணுக்கும், கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் சோம்பேட்டில் அமைந்துள்ள துர்கா தேவி கோயிலில் கடந்த சில வாரத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் ரயில் மூலம் மணமகன் ஊருக்கு சென்ற போது, விசாகப்பட்டினம் ரயில் நிலையம் வந்ததும், கழிவறைக்கு செல்வதாக ரெயிலில் இருந்து இறங்கிய வாணி மீண்டும் ரயிலில் ஏறவில்லை.
இதனையடுத்து, புது மனைவியை காணாமல் பதறிய நபர் அவரை, தேடி அலைந்தார்.
வாணி மாயமானது குறித்து இச்சாபுரத்தில் உள்ள வாணியின் அத்தை சத்யா வீட்டில் தகவல் தெரிவிக்கச் சென்ற போது, வாணி அங்கிருந்ததை கண்டு மணமகன் தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர்.
மணமகன் வீட்டார் வாணியின் குடும்பத்துக்கு திருமண செலவுக்காக கொடுத்த ரூ.1 லட்சம் பணத்திற்காக தான் திருமணம் செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, மணமகன் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியானது.
சிறுவயதிலே பெற்றோரை இழந்த வாணியை அவரது தாய் வழி அத்தையான சத்யா என்பவரே வளர்த்து வந்துள்ளார்.

கர்நாடக நபர் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 8 ஆண்களை திருமணம் செய்து, அதன் பின்னர் அவர்களிடம் நகை மற்றும் பணத்தை பறித்து விட்டு மாயமாகியுள்ளனர்.
வாணி அப்போது மைனர் பெண் என்பதால், பணத்தை பறித்தது குறித்து புகார் அளித்தால் மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக தங்கள் மீதும் வழக்கு பாயும் என யாரும் புகார் அளிக்கவில்லை.
தற்போது தலைமறைவாகியுள்ள வாணி மற்றும் சத்யாவை தனிப்படை காவல்துறை தேடி வரும் நிலையில், ஏற்கனவே அவரை திருமணம் செய்து பணத்தை இழந்த நாகிரெட்டி மற்றும் கேசவ ரெட்டி ஆகிய இருவரும் காவல் நிலையில் புகார் அளித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |