அமெரிக்காவில் வேலை தேடிக்கொண்டிருந்த இந்திய இளம்பெண்: வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல்
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்யலக்ஷ்மி (Rajyalakshmi (Raji) Yarlagadda, 23) என்னும் இளம்பெண் பட்டப்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.
சமீபத்தில் பட்டம் பெற்று வேலை தேடிக்கொண்டிருந்த ராஜ்யலக்ஷ்மி, கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 7ஆம் திகதி, காலையில் அலாரம் அடித்தும் எழவில்லையாம்.

வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல்
ராஜ்யலக்ஷ்மி தூக்கத்திலிருந்து எழாததால் அவரது அறைத்தோழிகள் அவரை எழுப்ப முயல, அவர் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
ராஜ்யலக்ஷ்மியின் மரணச் செய்தி கேட்டு அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இரண்டு நாட்களாக ராஜ்யலக்ஷ்மி இருமிக்கொண்டிருந்தார் என்றும், அவருக்கு நெஞ்சுவலி இருப்பதாகக் கூறியதாகவும் அவரது அறைத்தோழிகள் கூறியுள்ள நிலையில், அவர் எதனால் உயிரிழந்தார் என்பதை அறிவதற்காக அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதற்கிடையில், ராஜ்யலக்ஷ்மியின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |