நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் 2000 ஆயிரம் டொலர் வழங்கப்படும் - டிரம்ப் அறிவிப்பு
நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் 2000 டொலர் வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப் வரி
அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தினார்.

ரஷ்யவிடமிருந்து எண்ணெய் வாங்குவதாக கூறி, இந்தியாவிற்கு கூடுதல் வரியை அமுல்படுத்தினார்.
இந்த வரிவிதிப்புகளை ரத்து செய்யக்கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வரிவிதிப்பை எதிர்த்தவர்களை முட்டாள்கள் என டிரம்ப் விமர்சித்துள்ளார்.
மேலும், இதன் மூலம் கிடைத்த பணத்தில் அமெரிக்க மக்கள் ஒவ்வொருவருக்கும் 2000 டொலர் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
2,000 டொலர்
இது தொடர்பாக Truth Social பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வரிவிதிப்புகளை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள்! நாம் இப்போது உலகின் பணக்கார மற்றும் மிகவும் மதிக்கப்படும் நாடாகவும் இருக்கிறோம்.
கிட்டத்தட்ட பணவீக்கம் இல்லை, சாதனை பங்குச் சந்தை விலை, 401k(முதலாளியால் வழங்கப்படும் ஓய்வூதிய சேமிப்புத் திட்டம்) இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தவை.
டிரில்லியன் கணக்கான டொலர்களை பெற்று வருகிறோம், இதன் மூலம் விரைவில் எங்கள் மகத்தான கடனான, 37 டிரில்லியன் டொலர் செலுத்தத் தொடங்குவோம்.
ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள் எல்லா இடங்களிலும் உயர்ந்து வருகின்றன. சாதனை முதலீடுகள் நாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. மேலும், ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 2,000 டொலர் ஈவுத்தொகை வழங்கப்படும்(அதிக வருமானம் உள்ளவர்களை சேர்க்காமல்)" என குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |